TN Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!
TN Assembly 2024 Live: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் உள்ள புளியகுளம் விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

TN Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள புளியங்குளம் விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது.