Annapoorani: ‘என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி’.. அன்னபூரணி அரசு அம்மா பரபரப்பு வீடியோ!
Annapoorani Arasu Amma: ‘என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், என்னுடைய உண்மைத் தன்மையும், என்னுடைய சக்தியும் இந்த நிமிடம் வரை என்ன காத்துகிட்டு இருக்கிறது’ என்று அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.

Annapoorani Arasu Amma: கடந்த 2020 ஆம் ஆண்டு ஜிதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் அன்னபூரணி அரசு அம்மா. தற்போது திருவண்ணாமலை அருகே ஆசிரமத்தை அமைத்து தன்னுடைய பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். அன்னபூரணி அம்மா பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அன்னபூரணி. அந்த வீடியோவில், தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
அன்னபூரணி அரசு அம்மா சற்றுமுன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
அன்னபூரணி அரசு அம்மா பேசும் வீடியோவில், "நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நல்ல சக்தி வரும் போது, அதை எதிர்ப்பதற்காக கூடவே தீய சக்தியும் வரும். இறுதியில் நல்ல சக்தி தான் வெற்றி பெறும். அதே மாதிரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீயசக்திகளாக இருக்கக்கூடிய சில மனிதர்கள் என்னை நேரடியாக எதிர்த்து அழிக்கப்பார்த்தார்கள், அது முடியவில்லை. திரும்பவும் அந்த தீயசக்திகளாக இருக்கக்கூடிய சிலர் என்னை சூழ்ச்சி செய்து கையில் எடுத்திருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களோ அல்லது ஊடகங்களில் நான் பேட்டி கொடுத்தால் கூட நிறைய எதிர்மறை கமெண்ட்கள்தான் இருக்கும். அந்த தீயசக்திகள் தான் ஒரு ஐடி விங்க் வைத்து என்னை அழிக்க செயல்படுகிறார்கள். என்னுடைய பக்தர்கள் பெற்ற ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் கூட அந்த கமெண்ட்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கும். அந்த ஐடி விங்தான் என்னை ட்ரோல் பண்ணுகிறார்கள். என்னை கேலி, கிண்டல் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் மீடியாக்களில் எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.
என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், என்னுடைய உண்மைத் தன்மையும், என்னுடைய சக்தியும் இந்த நிமிடம் வரை என்ன காத்துகிட்டு இருக்கிறது. என்ன சூழ்ச்சி செய்தாலும் என்னுடைய உண்மைத் தன்மையும், சக்தியும் என்னை பாதுகாத்து, சத்தியத்தை வெற்றி பெறச்செய்யும். அப்போது அந்த தீய சக்திகளாக இருக்கக்கூடிய அந்த அதர்மம் வீழ்ச்சி அடையும். அப்போது அந்த தீயசக்திகளாக இருந்தவர்கள் யாரென்று மக்களே தெரிந்துகொள்வார்கள்." என்று கூறியிருக்கிறார்.
யார் இந்த அன்னபூரணி அரசு அம்மா?
அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலை அருகே ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருபவர் தான் இந்த அன்னபூரணி. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என கூறிக்கொண்டு திடீர் சாமியார் அவதாரம் எடுத்த இந்த பெண்மணி சமூகவலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறார். இவர் சமீபத்தில் தனக்கு சீடனாக இருந்த ரோஹித் என்பவரை 3 ஆவதாக திருமணம் செய்துகொண்டார். பின் அவருடன் இணைந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
ரோஹித் என்பவர் அன்னபூரணி உடன் இருந்து அவரையும், அவரது ஆசிரமத்தையும் நிர்வகித்து வந்தவர் என்பதும், அன்னபூரணி அரசு அம்மா பிரச்னைகளில் சிக்கிய போதெல்லாம் அதிகம் அடிபட்ட பெயரும் ரோஹித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்