‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!

‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 15, 2025 09:55 AM IST

‘அமித்ஷா சொல்லச் சொல்லி, தனிப்பட்ட முறையில் நான் எடப்பாடியை போய் பார்த்தேன். அவர் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டிருந்தால், 10 அல்லது 12 சீட் கொடுத்திருந்தால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது’

‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!
‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது நாம் ஆற்றும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. அதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன் என்றால், மற்றவர்கள் இந்த அளவிற்கு தமிழ் நாட்டை கெடுக்கவில்லை. எல்லாம் ஊழல் கட்சிகள் தான். திமுவுக்கும், அதிமுகவுக்கு ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அதிமுக தேச விரோத கட்சி இல்லை, இந்து விரோத கட்சி இல்லை, அராஜகமான கட்சி இல்லை. அதனால் அதிமுக மீது எப்போதும்.. பற்று இல்லை என்றால் கூட, அந்த கட்சியை ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கு.

எடப்பாடியை இருக்கும் வரை கூட்டணி..

பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எடப்பாடி மாதிரி ஒரு தலைவரை வைத்துக் கொண்டு, இந்த இணைப்பை எப்படி நடத்துவது என்று எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால், நான் அவருடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஒரு அரசியல் தலைவருக்கு உண்டான நோக்கே இல்லை, அவரிடம். எல்லா அரசியல் தலைவர்களுடனும் நான் பழகியிருக்கிறேன். 

கையில் வந்தது 2021 தேர்தல். அமித்ஷா சொல்லச் சொல்லி, தனிப்பட்ட முறையில் நான் எடப்பாடியை போய் பார்த்தேன். அவர் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டிருந்தால், 10 அல்லது 12 சீட் கொடுத்திருந்தால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது. நான் அவரிடம் கூறினேன், ‘நீங்க வெற்றி பெற மாட்டீர்கள்.. ஆனால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது, அது கிடைக்கவில்லை என்றால், 2006ல் கருணாநிதி ஆட்சி செய்தது போல ஸ்டாலினால் ஆட்சி செய்ய முடியாது, என்றைக்கு வேண்டுமானாலும் ஆட்சி கவிழும், ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு மாட்டேன் என்று கூற முடியாது,’ என்று கூறினேன்.

எடப்பாடியிடம் புரிதல் இல்லை

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ‘நாங்க ஜெயிக்கிறோம்ங்க.. நாங்க ஜெயிக்க மாட்டோம்னு நீங்க தாங்க சொல்றீங்க,’ என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. எனக்குப் புரியல, யார் இவருக்கு ஆலோசனை கூறுகிறார்? யார் இவருக்கு புள்ளி விபரம் கொடுக்கிறார்? கையில் வந்த ஒரு பெரிய வாய்ப்பபை தவறவிட்டுவிட்டார். அதனால் தான் கூறுகிறேன், ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எப்படி உறுதியாக இருந்தார்களோ, அந்த உறுதி, இப்போ இருக்கும் அதிமுக தலைமையிடம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னொன்று என்னவென்றால், அதிலும் சில பேர், ‘நாங்கள் பிரிந்த பங்காளிகள் தானே’ என்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே சொந்த லாபத்திற்காக, லோக்கலில் சப்போர்ட் செய்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இப்போ கட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார்கள். கட்சிக்கு கட்சி இந்த மாதிரி ஆட்கள் இருக்கிறார்கள். மாறுபட்ட கட்சிகளே மிக குறைவாக உள்ளது. 

அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்தால்..

பாஜகவை சொல்லலாம், கட்சி, நாடு, கொள்கை என்கிற பிடித்தம் அந்த கட்சியிடம் உள்ளது. அதிலும் சில பேர், ‘நாம இவங்களோடு போனா, நமக்கு லாபமோ’ என்று சிந்திக்கிறார்கள். அவர்கள், கட்சிக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை. அந்த மாதிரி சிந்திப்பவர்களை, அந்த கட்சியிலும் நான் பார்க்கிறேன். இது நாட்டுக்கு நல்லதல்ல, பாஜகவுக்கு நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல, இது மாற வேண்டும். 

அதிமுக-பாஜக சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் கூறுகிறேன், பாஜக தன்னுடைய நிலைமையை அதிகமாக மாற்றிக் கொண்டு, அதிமுக உடன் எப்படியாவது இணைய வேண்டும் என்று, அவர்களை கட்டிக் கொண்டால் பாஜகவுக்கு நஷ்டம் தான் வரும். இதை பாஜக உணர வேண்டும்,’’

என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அந்த விழாவில் பேசியுள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.