Tamil News  /  Tamilnadu  /  Three Youths Involved In Chain Snatching Attempt On Trichy Intercity Express
ஓடும் ரயிலில் வயதான பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்
ஓடும் ரயிலில் வயதான பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்

Chain Snatching:ஓடும் ரயிலில் செயின் பறிப்பு முயற்சி! 3 வடநாட்டவர் தப்பியோட்டம்

22 September 2022, 17:50 ISTMuthu Vinayagam Kosalairaman
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 17:50 IST

திருமங்கலம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் முயற்சித்துள்ளனர். ஆனால் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் உஷார் ஆனதால் அபாய சங்கிலி இழுத்து அவர்கள் அனைவரும் தப்போயிடியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (51). இவர் திருநெல்வேலியில் இருந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது கணவருடன் சுந்தரத்துடன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது ரயில் திருமங்கலம் அருகே ஆறுகண் பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் திடீரென லட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் ரயிலில் உள்ள அவசர சங்கிலியை இழுத்துள்ளார். இதனால் வேகமாக சென்று கொண்டிருந்த ரயில் குண்டாற்று பாலத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே லட்சுமி சுதாரித்து கொண்ட நிலையில் அவரது நகை தப்பியது. அப்போது ரயில் நிறுத்தப்பட்டதால், திருட்டில் ஈடுபட முயன்ற 3 வடநாட்டவரும் ரயிலில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்