தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Three Died After Advertisement Banner Fall Down In Coimbatore

Banner Death: கோவையில் 3 பேர் உயிரை காவு வாங்கிய ராட்சத விளம்பர பேனர்!

Karthikeyan S HT Tamil
Jun 01, 2023 11:31 PM IST

Coimbatore: கோவை அருகே கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பரப் பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கோவை அருகே கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பரப் பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் மிகப்பெரிய விளம்பர பேனர் பொருத்தும் பணிகள் இன்று (ஜூன் 1) மேற்கொள்ளப்பட்டன. சேலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிசாமி என்பவரது தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றன. சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த 7 தொழிலாளர்கள் இப்பணிகளை செய்து வந்தனர்.

விளம்பர பேனரை பொருத்திக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், விளம்பர பேனர் பொருத்தவிருந்த இரும்பு கம்பிகள் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இரும்பு கம்பிகளுக்கு அடியில் சிக்கினர். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் இணைந்து, இரும்பு கம்பிகளை அப்புறப்படுத்தி அடியில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையி்ல் உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த குமார் (40), குணசேகரன்(52), சேகர்(45) ஆகியோர் என தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். விளம்பர பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் அந்த பேனரின் கம்பிகள் சரிந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்