Seeman: ’50,000 தந்து புகாரை வாபஸ் வாங்க வைச்சாங்க! இந்த போர் முடியாது’ சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி பகீர் வீடியோ!
“மதுரை செல்வம் விஷயம் குறித்து விசாரிக்கப்பட்டதா? இல்லை நீங்கள் 2011இல் மதுரையில் பிணையில் இருக்கும்போது என்னை கூட்டிட்டு போய் 5 வாட்டி பண்ணீங்களே அது வெளியில் வந்ததா?”
சென்னை வளரசரவாக்கம் காவல்நிலைய வளாகத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “என்னுடைய மௌனத்தில் நீங்கள் ரொம்ப பேசிவிட்டர்கள். என் முகத்திற்கு நேராக என் மீது புகார் சொல்லலாம் ஆனால் ஏன் ஓடிப்போனீர்கள்? என விஜயலட்சுமி புகார் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.
சீமானின் பேச்சுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஊடக நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். வீரலட்சுமி அம்மாவின் இடத்தில் எங்களுக்கு சாப்பாடு நிறுத்திய உடன் நான் காவல்துறைக்கு தெரியப்படுத்தினேன்.
காலை 3 மணி அளவில் சாட்டை துரைமுருகன் தம்பிக்கு போன் செய்தேன். அவர்தான் பாலசுப்பிரமணியம் என்ற வழக்கறிஞரை அனுப்பினார். அவர் 8 மணிக்கு என் இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்து இரவே புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று சொல்லி எனது வங்கி கணக்கில் 50 ஆயிரம் அனுப்பி என்னை போக சொன்னார்கள்.
சீமான் அவர்களிடம் நான் கேட்கிறேன். வெளியே வந்து நின்றுவிட்டு ஒன்னுமே பண்ணாத மாதிரி பேசிட்டு இருக்கீங்க. மதுரை செல்வம் விஷயம் குறித்து விசாரிக்கப்பட்டதா? இல்லை நீங்கள் 2011இல் மதுரையில் பிணையில் இருக்கும்போது என்னை கூட்டிட்டு போய் 5 வாட்டி பண்ணீங்களே அது வெளியில் வந்ததா?
யார் என்ன ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்காங்க! நீங்க மானநஷ்ட வழக்கு எல்லாம் போடுங்க நா மொத்தமா எல்லாத்தையும் எடுத்து வந்து காட்டுறன். நா மூட வெப்பேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
சாட்டை துரைமுருகன் தான் என்னை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பினார். என்னை பொய் சொல்லும் பெண்ணாக சீமான் கருதினார் என்றால் இந்த போர் முடியவே முடியாது.
டாபிக்ஸ்