Viral : அடேங்கப்பா.. தாலி கட்டிய உடனே இப்படியா? கூலிங் கிளாஸ் போட்டு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்..வைரல் வீடியோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Viral : அடேங்கப்பா.. தாலி கட்டிய உடனே இப்படியா? கூலிங் கிளாஸ் போட்டு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்..வைரல் வீடியோ!

Viral : அடேங்கப்பா.. தாலி கட்டிய உடனே இப்படியா? கூலிங் கிளாஸ் போட்டு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்..வைரல் வீடியோ!

Divya Sekar HT Tamil
Jun 02, 2023 02:31 PM IST

திருவாரூரில் தாலி கட்டிய கையோடு கூலிங் கிளாஸ் உடன் குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள் க்யூட்டாக ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்
குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதிகள்

இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் வீட்டில் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.அப்போது உறவினர்கள் உணவு அருந்தி கொண்டிருந்தபோது புது மணத் தம்பதிகள் இருவரும் உறவினர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் திடீரென நடனமாடத் தொடங்கினர்.

கல்யாண கோலத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு க்யூட்டாக வெட்கப்பட்டு கொண்டே தம்பதிகள் இருவரும் நடனமாடியுள்ளனர். அப்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கத்தி கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோ மணமகன் விஜயின் நண்பர்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. கூலிங் கிளாஸ் உடன் தம்பதிகள் குத்தாட்டம் போட்ட வீடியோவை நண்பர்கள் சமூக வலைதலங்களில் பரப்பி வருவதுடன் தம்பதிகளுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.