Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி
Thirumavalavan Press Meet: ஆதி திராவிடர் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசி கருத்துக்கு பதில் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் இது வலதுசாரி அரசியல் நாடகம் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி
சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சமூக நலக் கூடத்தில் தோழர் எஸ்.நடராஜன் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது எஸ். நடராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ஆளுநர் ரவி மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து, பேசுவதும், செயல்படுவதும் நீடிக்கிறது.
வலதுசாரி அரசியல் நாடகம்
தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்தைகளை அபகரிக்கும் சூழ்ச்சி. தலித்துகளை பற்றி கரிசனமாக பேசுவது வலதுசாரி அரசியல் நாடகம்.