முடிவுக்கு வந்ததா பொன்முடியின் அரசியல்? விழுப்புரம் திமுக. பேனர்களில் பொன்முடி படம் புறக்கணிப்பு!
”விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய அரசியல் தலைவராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த பொன்முடியின் பெயர் பேனர்களில் இடம்பெறாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடியின் பெயரும் புகைப்படமும் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளராக முதல் முறையாக பங்கேற்ற லட்சுமணனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரம் முழுவதும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய அரசியல் தலைவராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த பொன்முடியின் பெயர் பேனர்களில் இடம்பெறாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
