தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  There Is A Possibility That The Notification About Giving <Span Class='webrupee'>₹</span>1000 In Pongal Prize Package Will Be Released

Pongal Parisu 2024: ’பொங்கல் பரிசாக ரூ.1000 வருமா? வராதா?’ இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jan 03, 2024 08:09 AM IST

”வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசுக்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது”

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் ரொக்க்கம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.  

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அரசு தொடங்கியது. மேலும் வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் நிவாரண நிதியை அரசு அறிவித்து உள்ளது. 

இந்த நிலையில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்