Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!

Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 13, 2025 11:15 AM IST

சுமார் 2500 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாய்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் அரசு நிர்வாகம் நிரந்தர பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!
Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் தடுத்தலான் கோட்டை, செம்பிலான்குடி, குறிஞ்சாக்குளம், வேப்பங்குளம், ஆகிய நான்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் உண்டுபத்தி, கூனங்குளம், பீர்க்கன் குறிச்சி, இடையன்குளம் ஆகிய நான்கு மைனர் கண்மாய்கள், ஆக மொத்தம் எட்டு கண்மாய்கள் மழையை நம்பி வானம் பார்த்த பூமியாக மானாவாரி கண்மாய்களாக இருந்து வருகின்றன.

வறண்டு கிடக்கும் பாசன பகுதி
வறண்டு கிடக்கும் பாசன பகுதி

கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி

சுமார் 2500 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாய்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் அரசு நிர்வாகம் நிரந்தர பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்று 13-4-2025 காலை இந்தக் கண்மாய்கள் இதற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு உரிய வழிகள் குறித்து நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டது.

வான்பார்த்த பூமியாக, மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்கிற சூழலில், அங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கான எந்த பாசன வசதியும் இல்லாத நிலையில், ஒவ்வொரு முறையும் மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆய்வு, அங்கு பல ஆண்டுகளாக நிலவி வந்த மோசமான சூழலை, வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆய்வில் ஈடுபட்ட விவசாயிகள்
ஆய்வில் ஈடுபட்ட விவசாயிகள்

நீர்வளத்துறையில் முறையிட முடிவு

காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முகவை மு மலைச்சாமி, தடுத்தலான் கோட்டை கிராமம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன், ஓய்வு பெற்ற பி டி ஓ பெரியவர் காளிமுத்து, வே.முருகேசன், ஆ.ஜெயபாண்டியன் மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நீர் வளத்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் அவர்களை நேரில் சென்று சந்தித்து நிரந்தர பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தின் தலைமை ஆசிரியராக உள்ளார். 23 ஆண்டுகளுக்கு மேல் அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய தேர்ந்த அனுபவம் மிக்கவர். இணையத்தின் முழு செயல்பாட்டை கண்காணிப்பதுடன், அனைத்து துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் எழுதுகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்துள்ள இவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர். தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு நிறுவனங்களைத் தொடர்ந்து 2022ல் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். திரைக்கதை எழுதுவது, இசை கேட்பது இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.