" அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்" சீமான் கோரிக்கை
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள வீடுகளை அகற்ற அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது என நாதக தலைவர் சீமான் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

" அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்" சீமான் கோரிக்கை
சென்னையில் உள்ள அடையாறு ஆற்றின் கரைப்பகுதியை பலப்படுத்தும் நோக்கில் அதன் கரையில் வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அந்த பகுதிகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் ஆர்பாட்டம் நடத்தினார்கள். மேலும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி சம்பவ இடத்திற்கே சென்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இது குறித்தான அவரது பதிவில், "அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.