மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு ஆக சந்தித்த போராட்டக் கதை
மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு சந்தித்த போராட்டக் கதையைப் பார்ப்போம்.
![மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு ஆக சந்தித்த போராட்டக் கதை மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு ஆக சந்தித்த போராட்டக் கதை](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/14/550x309/tan_1734202576533_1734202655781.png)
மதராஸ் மாகாணம் முதல் தமிழ்நாடு வரை.. பிரிட்டிஷ் காலம் தொட்டு இந்திய ஒன்றியம் வரை தமிழ்நாடு சந்தித்த போராட்டக் கதையினைப் பார்ப்போம்.
1802ஆம் ஆண்டு வெல்லெஸ்லி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார். பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவில் சென்னை அல்லது மதராஸ் மாகாணம் இருந்தது.
இந்த நிர்வாக அமைப்பு இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளைக்கொண்டிருந்தது. விடுதலைக்குப் பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியது.
குறிப்பாக, நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநில உருவாக்க நடவடிக்கைக்கு பின்பு தமிழர்களுக்கான தனி மாநிலமாக சென்னை மாநிலம் அல்லது மதராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது.
நீதிக்கட்சியும் சென்னை மாகாணமும்:
மாதவன் நாயர், தியாகராயர் மற்றும் பலர் இணைந்து தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பு இயக்கத்தினை உருவாக்கினர். பிற்காலத்தில் இவ்வியக்கம் ‘’நீதிக்கட்சி" என மாறியது. 1920ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி போட்டியிட்டு வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது.
1920 முதல் 1937ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 5 தேர்தல்களில் நான்கு முறை வென்று நீதிக்கட்சி ஆட்சியமைத்தது. ஆனால், 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியுற்றது.
இராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றார். அவர் இரண்டு அரசு கொள்கைகளை உருவாக்கினார்.
முதலாவதாக தீண்டாமை ஒழிப்பு, இரண்டாவது இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிப்பது. பள்ளிகளில் இந்தி கட்டாய மொழிப் பாடமாக்கப்பட்டது. இது பிராமணரல்லாத தமிழர்/திராவிடர்களின் சுயமரியாதையை அவமானப்படுத்தியதாக கருதப்பட்டது.
அப்போது தமிழறிஞர்களான மறைமலை அடிகள், திரு.வி.கல்யாண சுந்தரம் மற்றும் பலர் இந்தி மொழிக்கு எதிராக கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரியார் ’தமிழ்நாடு தமிழருக்கே'என்ற முழக்கத்தினை எழுப்பி, இப்போராட்டத்தை ஆதரித்தார்.
அதன்பின், நீதிக்கட்சி பெரியார் ஈ.வே.ரா தலைமையில் சுயமரியாதை இயக்கம் ஆனது.
தமிழர், தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளர் ஆகியோரை உள்ளடக்கிய திராவிட நாடு என்கிற தனி நாடு கோரிக்கை இயக்கம் பிராமணரல்லாதோர் மத்தியில் வளரத் தொடங்கியது. 1944ஆம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி, நீதிக் கட்சியினை திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்
மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், தமிழ் மொழி பேசும் பலரை உள்ளடக்கிய சென்னை மாநிலம், 1956, நவம்பர் 1ல் உருவாக்கப்பட்டது.
சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆன கதை:
பெரும்பாலான மக்கள் சென்னை மாநிலம் என வைக்கப்பட்ட பெயரை விரும்பவில்லை. தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தை “தமிழ்நாடு” என்று மாற்ற விரும்பினர். இந்தப் பெயர் மாற்றத்திற்கான போராட்டம் ஏறத்தாழ பத்தாண்டுகளாக நீடித்தது.
காந்தியவாதியும் சுதந்திரப் போராட்டத்தியாகியுமான விருதுநகர் சங்கரலிங்கனார் சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி சாகும் வரை உண்ணா நோன்பினை அறிவித்தார். அதன்படி, ஜூலை 27, 1956அன்று தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து அக்டோபர் 13, 1956 அன்று 76-ஆவது நாள், தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக தனது இன்னுயிரை நீத்தார். அடுத்து மத்தியில் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் மாநிலங்களில் கொண்டுவந்த இந்தி உள்ளிட்ட மும்மொழிக்கொள்கையினை மாற்றி, தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக்கொள்கை வேண்டி, பலர் தங்களை தியாகம் செய்தனர்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்