Thoothukudi: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலருக்கு டிஜிபியாக பதவி உயர்வு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thoothukudi: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

Thoothukudi: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

Marimuthu M HT Tamil Published Dec 30, 2023 10:12 PM IST
Marimuthu M HT Tamil
Published Dec 30, 2023 10:12 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலர் சைலேஷ் குமார் யாதவ், டிஜிபியாக பதவி உயர்வு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலர் சைலேஷ் குமார் யாதவ், டிஜிபியாக பதவி உயர்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. ஆனால், அவை ஒழுங்காக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கவில்லை எனப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

அதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம், தொடர்பாக, அருணா ஜெகதீசனும் பல்வேறு தரப்பு மக்களிடம் விசாரித்து அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தார். அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய 27 காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் குழு பரிந்துரைத்து இருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக நவம்பர் மாதம் நடந்த உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில், அருணா ஜெகதீசன் பரிந்துரைப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. அப்போது, 21 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அலுவலர்கள் உட்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் சொல்லியிருந்தது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ்வை, தமிழ்நாடு அரசு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.