Smuggled Sea Cucumber : கடல் அட்டை கடத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை, தொடர்ந்து கடத்தி விற்பனை செய்த ஜாகிர் உசேன் என்பவர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடல் அட்டை கடத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது
ராமநாதபுரம் : பெரியபட்டினத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் கடல் அட்டை, கடல் வெள்ளரி உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளார். இவர் மீது இது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்காவின் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், ஜாகிர் உசேனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் உத்தரவுப்படி நேற்று ஜாகிர் உசேன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 20 வருடங்களுக்கு பிறகு தற்போது கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.