தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  The Person Who Punched Me First And Last Was Kp Munusamy - Former Chief Minister O. Panneer Selvam

OPS vs EPS: ’என்னை முதலிலும் கடைசியிலும் குத்தியவர் அவர்தான்!’ போட்டு உடைத்த ஓபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Jan 07, 2024 03:27 PM IST

“ஏற்கெனவே கொள்கை ரீதியாக டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சின்னம்மா அவர்களுக்கும் உடன்பாட்டுக்கு ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்பட காத்திருக்கிறோம்-ஓ.பன்னீர் செல்வம்”

செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

ட்ரெண்டிங் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்தல் மூலமாகத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இன்று அதனை மாற்றி உள்ளனர். எம்ஜிஆர் கொண்டுவந்த சட்டவிதியை காலில் போட்டு மிதிக்கும் நிலையை எடப்பாடி பழனிசாமி கொண்டுள்ளார். 

இதனை மீட்கவே தொண்டர்களை சந்தித்து சுற்றுப்பயணம் செய்து வருகிறோம்.  இதுவரை 15 வருவாய் மாவட்டங்களுக்கு சென்று வருகிறோம். 

நாங்கள் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்த அதிமுக ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும் என்பதை செல்லிக் கொண்டே இருந்தேன்.  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்து சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ள பல பிரிவுகள் ஒன்று சேர்ந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். ஏற்கெனவே கொள்கை ரீதியாக டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சின்னம்மா அவர்களுக்கும் உடன்பாட்டுக்கு ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்பட காத்திருக்கிறோம். அதற்கு சின்னம்மா அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

எனக்கு முதல் குத்தும் சரி; கடைசி குத்தும் குத்தியவர் கே.பி.முனுசாமிதான்.  நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். நாங்கள்தான் எல்லாவற்றையும் நடத்துவோம் என்பவர்கள்தான் முன்வர வேண்டும். 

செவிடன் காதில் ஊதிய சங்குபோல்தான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளது. தினந்தோறும் அறிக்கைகள் வாயிலாக நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் செய்வதைத்தான் செய்வேன் என்று அரசு செயல்பட்டு வருகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்