‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 05, 2025 06:27 PM IST

எங்கள் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தான், அன்று காவல் துறையின் இந்த அணுகுமுறைக்கு தோழர் பாலகிருஷ்ணன் அவ்வாறு பேசினார். இதை திமுக தலைமை புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.

‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!
‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

‘‘மதவெறி பாஜக அரசு, மதவெறி மட்டுமின்றி மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, அடிப்படை உரிமைகளுக்கு மாறாக நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக, வலுமிக்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். வேலை தருவோம் என்று சொன்ன பாஜக அரசு, வேலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவது, வேலையை பறிக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நிரந்தர பணியிடமே அரசுப் பணியில் இருக்காது என்கிற கொள்கையை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மதவெறி சக்தியை எதிர்ப்பதில், திமுக உடன் தொடர்ந்து மார்க்சிஸ்ட் பயணிக்கும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனநாயக ரிதியாக எங்களின் போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன் பேசியது ஏன்?

ஊர்வலம், ஆர்பாட்டம், போராட்டம் எல்லாம் இந்திய அரசமைப்பு வழங்கிய அதிகாரம். அதை தடுக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை. எங்கள் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தான், அன்று காவல் துறையின் இந்த அணுகுமுறைக்கு தோழர் பாலகிருஷ்ணன் அவ்வாறு பேசினார். இதை திமுக தலைமை புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். திமுக உடன் பல முறை கூட்டணியில் இருந்திருக்கிறோம். பலமுறை எதிரணியில் இருந்திருக்கிறோம். அப்போதும் நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் தெளிவாக இருந்திருக்கிறோம்.

திமுக வெளிச்சத்தில் அல்ல

மார்க்சிஸ்ட் கட்சி, தன் பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சமரசம் இல்லாமல் போராட்டம் நடத்தியதால் தான், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர. ஏதோ திமுகவின் வெளிச்சத்தால் தான் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்கிற முறையில் திமுக தலைமை சொல்வது என்பது, பொருத்தமல்ல. அந்த ஒரு செய்தி முரசொலி பத்திரிக்கையில் வெளியிட்டிருக்கிறார்கள். அது பொருத்தமான செய்தி அல்ல,’’

என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.