Tamil News  /  Tamilnadu  /  The Madras High Court Has Quashed The Land Acquisition Case Against Former Minister Jayakumar
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Jayakumar Land Grab Case: ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!

30 September 2022, 11:40 ISTDivya Sekar
30 September 2022, 11:40 IST

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார், மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயக்குமார் வாதங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் மருமகனுக்கு எதிரான வழக்குகளையும் நீதிபதி இளந்திரையன் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாபிக்ஸ்