தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Singer Dk Pattamal: ‘ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!’ தேசியக் குயில் டி.கே.பட்டம்மாள் பிறந்தநாள் இன்று!

HBD Singer DK Pattamal: ‘ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!’ தேசியக் குயில் டி.கே.பட்டம்மாள் பிறந்தநாள் இன்று!

Kathiravan V HT Tamil
Mar 19, 2024 07:00 AM IST

”தனது 4 வயது முதலே பாடல்களை பாடத் தொடங்கிய பட்டமாள் தனது 10 வயதில் வானொலியில் பாடத் தொடங்கினார். அதற்கு பிறகுதான் பட்டம்மாள் என்ற பெயர் இசை உலகில் பிரபலம் ஆனது”

தேசியக்குயில் பட்டம்மாள்
தேசியக்குயில் பட்டம்மாள்

ட்ரெண்டிங் செய்திகள்

பாடல்கள் மீது ஆர்வம் 

பழமைவாதிகள் நிறைந்த அவரது குடும்பத்தில் இவர் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் கூட அனுமதிக்கப்படவேயில்லை. தனது 4 வயது முதலே பாடல்களை பாடத் தொடங்கிய பட்டமாள் தனது 10 வயதில் வானொலியில் பாடத் தொடங்கினார். அதற்கு பிறகுதான் பட்டம்மாள் என்ற பெயர் இசை உலகில் பிரபலம் ஆனது. 

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!

தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன், ஆடுவோமே பள்ளு பாடுவோமே… பாருக்குள்ளே நல்ல நாடு… என்ற பாடல்களை அவர் பாடிய பிரபலாமான திரைப்பாடல்கள் ஆகும். 

20ம் நூற்றாண்டின் முந்தைய காலத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் பெண் இசை மும்மூர்த்திகளாக அறியப்பட்டவர்களில் ஒருவர் டி.கே.பட்டம்மாள். மற்ற இருவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல் வசந்தகுமாரி ஆவார்கள்.

மேடை பாடல்கள் முதல் திரையிசை பாடல்கள் வரை

தனது தந்தை கிருஷ்ணசுவாமி தீக்ஷதரிடம் 4 வயது முதலே பாடக்கற்றார். பின்னர் ஒரு தெலுங்கு ஆசிரியர் அவருக்கு பாடல் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றுக்கொடுத்தார். முறையாக சங்கீதம் கற்க வாய்ப்பு கிடைக்காதவர். முதலில் மேடையேற்ற தயங்கிய பெற்றோரிடம் அவரது பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்முக்குட்டி அம்மாள் அனுமதி பெற்று மேடையில் பாட வைத்தார். அப்போது முதல் தனது தனித்தன்மையான குரலால் இசை மேடைகளை அலங்கரித்தவர். கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களை கேட்டு பாடக்கற்றுக்கொண்டார்.

1939ம் ஆண்டு திரை இசையில் பாபநாசம் சிவன் இவரை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடையச் செய்தவர். நாடு சுதந்திரம் பெற்றபோது, அகில இந்திய வானொலியில், அவர் பாடிய விடுதலை, விடுதலை மற்றும் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடல்கள் மக்களுக்கு சுதந்திர உணர்வை பொங்கச் செய்து உற்சாகத்தை அளித்தது. காந்தி இறந்போதும் இவர் அகில இந்திய வானொலியில் பாடிய பாடல்கள் மகாத்மாவின் இழப்பால் வருந்திய இந்திய உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

அவர் மூன்று மாதக்குழந்தையாக இருந்தபோது ரமண மகரிஷியிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அப்போது அவர் தேனை மூன்று மாத குழந்தை பட்டமாளின் வாயில் வைத்துவிட்டு, தேன் சுவையாக இருக்கிறதா? என்று கேட்டுள்ளார். ஒன்றுமறியாத பட்டமாளோ தனது குட்டிக்கண்களை உருட்டிக்கொண்டு தேனை உச்சுக்கொட்டி சுவைத்துள்ளார். இதை பட்டாளிடம் அடிக்கடி கூறும் அவரது பெற்றோர், ‘அந்த ஆசிர்வாதம்தான் நீ நன்றாக பாடுகிறாய்‘ கூறுவார்களாம்.

கர்நாடக இசையில் உச்சம் தொட்டவர்களில் ஒருவர். குடும்பத்தில் எதிர்ப்புகளை மீறி இசையில் சாதித்த பெண்மணி, தியாகராஜ உற்சவ நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்களை பாடிப்பாடியே பாடல் பழகினார். முத்துச்சாமி தீக்ஷிதரின் பாடல்களை பாடுவதில் சிறந்து விளங்கினார். 

ஹேராம் படத்தில் பாடிய கடைசி பாடல் 

தனது 80 வயதில் இளையராஜா இசையில் அவர் கமல் நடித்த ஹேராம் படத்தில் பாடிய பாடலே பட்டம்மாள் தமிழ் சினிமாவில் பாடிய கடைசி பாடல். வைஷ்ணவ ஜனதோ என்ற அந்தப்பாடலில் அந்த வயதிலும் அவருடைய குரல் தேனில் ஊறிய பலாவினும் இனியது என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு வெளிநாடுகளில் பாடியுள்ளதால் சர்வதேசமும் ரசித்த குரல் அவருடையது.

டி.கே.பட்டம்மாள் பாடிய ஈசனே இந்த ஏழைக்கிறங்க இன்னும் தாமசமா என்ற பாடலை அவர் குரலில் கேட்டு மகிழுங்கள். ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்துகொண்ட பட்டம்மாளுக்கு, சிவகுமார், லட்சுமணக்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். 2009ம் ஆண்டு ஜீலை 16ம் தேதி இயற்கை எய்தினார். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்