Dindigul: அரசுப்பேருந்தில் கொசுத்தொல்லை; கடுப்பாகி பேருந்தை நிறுத்திய பயணி!
அரசுப்பேருந்தில் பயணிகள் கொசுத்தொல்லையால் அவதிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த ஏசி பெட்டிகள் சிதிலமடைந்து இருந்ததாக தெரிகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைத்தவிர்த்து பேருந்தினுள் அதிகப்படியான கொசுத்தொல்லை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது; இதனால் பேருந்தினுள் இருந்த பயணிகள் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரம் கொசுத்தொல்லையால் அவதிப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆத்திரம் தாங்காத பயணி ஒருவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி, கொசு மருந்தை ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். தொடர்ந்து பயணிகள் அனைவரையும் கீழே இறங்கச்சொன்ன அவர், ஒவ்வொரு சீட்டிலும் கீழே மேலுமாக மருந்தை தெளித்திருக்கிறார்.
அதன் பின்னர் அந்த பேருந்தானது 5 நிமிடம் கழித்து மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. பட்டப்பகலில் அரசு பேருந்தில் கொசுத்தொல்லையால் பயணிகள் அவதிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து பயணிகள் கூறும் போது, “ இது மிகவும் வேதனையான விஷயம். பேருந்தில் ஆங்காங்கே ஏசி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது” என்றனர்.