தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Arthur Cotton: 'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!

HBD Arthur Cotton: 'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!

Kathiravan V HT Tamil
May 15, 2024 07:15 AM IST

”கரிகால் சோழன் கட்டிய கல்லணையை சீர்படுத்து அணை கட்டுமானத்தை மேம்படுத்திய சர் ஆர்தர் காட்டன் தென்னிந்திய நீர்பாசன திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக நினைவுக்கூரப்படுகிறார்”

'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!
'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் 

ஆர்தர் காட்டனின் பயணம் இங்கிலாந்தில் தொடங்கியது. 1803ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி பிறந்த ஆர்தர் பொறியியல் கல்வியைப் பயின்றார்.  

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் சேர்ந்த ஆவர், நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத்தில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். 

1822ஆம் ஆண்டு ஏரி பராமரிப்பு குறித்த கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம்செய்யப்பட்டார். 

கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய் மற்றும் குளங்களை பராமரித்து நீர் விநியோகம் செய்யும் முறை குறித்து கார்ட்டன் அறிந்து கொண்டார். 

தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்த சர் ஆர்தர் காட்டன் மதராஸ் மாகாண பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளராக பொறுப்பேற்றார். 

கரிகாலன் கட்டிய கல்லணையில் அதிக நீர் வரத்தால் மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்து காவிரி படுகை மேடாகவும், கொள்ளிடம் பள்ளமான படுகையாகவும் மாறியது. இந்தனால் நீரோட்டம் முழுவதும் கொள்ளிடத்தில் பாய காவிரி பாசனப்பகுதி வறண்டது. இந்த பிரச்னையை சரி செய்ய பொறியாளர் சர் ஆர்தர் காட்டனை அழைத்தது ஆங்கிலேய அரசு.

சர் ஆர்தர் கட்டன் செய்த மாற்றம்

கரிகாலன் கட்டிய கல்லணையை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய அணையை கட்ட ஆங்கிலேய அரசு முடிவெடுத்த போது, இதற்கு மாற்றாக கரிகாலன் கட்டிய கல்லணையை ஆய்வு செய்யத் தொடங்கினார் ஆர்தர் காட்டன்.

கரிகாலன் கட்டிய கல்லணையை அடிக்கல்லாக வைத்தே புதிய தடுப்புகளை ஏற்படுத்தும் முடிவை எடுத்து அதில் மணல் போக்கிகளை அமைத்து கல்லணைக்கு ‘கிராண்ட் அணைகட்’ என பெயர் சூட்டினார். 

கல்லணையின் கிழக்கு பகுதியில் அடி மதகுகள் அமைத்து காவிரி நீர் கொள்ளிடம் செல்லாமல் காவிரிக்கே திருப்பி விட்டார் ஆர்தர் காட்டன். சர் ஆர்தர் காட்டன் மேற்கொண்ட கல்லணை சீரமைப்புதான் இன்று வரை டெல்டாவை செழிப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆந்திராவில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கான பங்களிப்பு 

இன்றைய ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிப் படுகைகளில் சர் ஆர்தார் காட்டனின் மிக முக்கியமான பங்களிப்புகள் கிடைத்தன. 

1852 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் மீது கட்டப்பட்ட டவுளேஸ்வரம் தடுப்பணை அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். இந்த தடுப்பணை இப்பகுதியில் நீர்ப்பாசன நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்தியது, இது முன்னர் தரிசாக இருந்த பரந்த நிலப்பரப்புகளை பயிரிட உதவியது.

நீர்த்தேக்கப் பொறியியல் மற்றும் நீர்ப்பாசன முறைகளில் ஆர்தர் காட்டனின் தொலைநோக்கு அணுகுமுறை தென்னிந்தியாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றியது. ஒரு காலத்தில் வறண்ட பகுதிகளை வளமான விவசாய மையங்களாக மாற்றியது. நிலையான நீர் மேலாண்மை மற்றும் வளங்களின் சமமான விநியோகம் ஆகியவற்றில் அவர் அளித்த முக்கியத்துவம் இப்பகுதியில் நவீன நீர் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

ஆர்தர் காட்டனின் வாழ்க்கை மற்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நீர்த்தேக்கப் பொறியியலுக்கான பங்களிப்புகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுகின்றன. 

1899ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள் தனது 96ஆவது வயதில் ஆர்தர் காட்டன் காலமானார். ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ஏராளமான சிலைகளை வைத்து மக்கள் அவரை நினைவுக்கூர்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கல்லணையிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்