School Reopens : மாணவர்களே எதிர்பார்த்த குட் நியூஸ்! 1-12ம் வகுப்புகளுக்கு ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு-அமைச்சர் அறிவிப்பு
School Reopens : மாணவர்களே எதிர்பார்த்த குட் நியூஸ் வந்துவிட்டது. அடுத்த மாதம் 7ம் தேதிதான் பள்ளிகள் திறபக்கப்படுகிறது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு பள்ளிகள் திறக்க இரண்டு தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த தேதியை தமிழக முதல்வர் தேர்வு செய்கிறாரோ அந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மேல்நிலை மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கபட்டிருந்தது.
வாட்டி வதைக்கும் கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பது தாமதமாக வாய்ப்பு இருக்குமா என்று மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், அமைச்சர் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என்று திட்டவட்டமாக கூறிவந்த நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கும் பின் பள்ளி திறக்கும் தேதிகளில் மாற்றம் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய காலம். கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன்.
ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள்.
சிங்கப்பூர், ஜப்பான் வெளிநாட்டு பயணங்களில் இருந்த முதலமைச்சர் ஃபோனில் தொடர்புகொண்டு பேசிவந்தோம். முதன்மை கல்வி அதிகாரிகளும் வெயில் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். அதன்படி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சிகரமானதாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.