தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  The Girl Died Of Dengue Fever? The Girl's Brain Was Damaged By Viral Fever

டெங்கு காய்ச்சலால் சிறுமி மரணம்?வைரஸ் காய்ச்சலால் சிறுமியின் மூளை பாதிப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 15, 2023 11:29 AM IST

வைரஸ் காய்ச்சலால் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மகாலட்சுமியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளது.

சாம்பாரில் விழுந்து குழந்தை பலி
சாம்பாரில் விழுந்து குழந்தை பலி

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன். கூலி தொழிலாளியான முனீஸ்வரனின் ஆறு வயது மகள் மகாலட்சுமி. இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கடந்த 20 நாட்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் குழந்தை மகாலட்சுமிக்கு ரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை உயர வில்லை என்று கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி மகாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக கேட்டபோது டெங்கு காய்ச்சல் இல்லை. வைரஸ் காய்ச்சலால் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மகாலட்சுமியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளது.

இதேபோன்று கடந்த சில நாட்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பல்வேறு விதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கோரம்பள்ளம் அருகே உள்ள அபிராமி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த சிறுமி உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்