TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியானது குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியானது குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை - விபரம் இதோ!

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியானது குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 01, 2025 11:27 AM IST

TNPSC Group 1 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் இன்று வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியானது குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை - விபரம் இதோ!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியானது குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை - விபரம் இதோ!

விண்ணப்பிப்பது எப்படி?

குரூப் 1, 1 ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு வருகிற ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும் என்றும், தேர்வுக்கான கட்டணம் ரூ.100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் மே 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மொத்தம் 70 பணியிடங்கள்

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி, குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 காலிபணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 7 காலியிடங்கள், வணிக வரி உதவி ஆணையர் பணியிடத்துக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 நிலைகளில் தேர்வு நடைபெறும்.