பொதுப்பணித் துறைக்கு ரூ.2.38 கோடி மதிப்பில் வாகனங்களை வழங்கிய முதல்வர்
பொதுப்பணித் துறைக்கு ரூ.2.38 கோடி மதிப்பில் 29 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை : பொதுப்பணித் துறையின் தலைமைக் கட்டடக் கலைஞர் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.38 கோடி மதிப்பிலான, 7 சீருந்துகள் மற்றும் 22 ஈப்புகள் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4.5.2022) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் தலைமைக் கட்டடக் கலைஞர். கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 7 புதிய சீருந்துகள் மற்றும் 22 புதிய ஈப்புகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாகனங்களை வழங்கினார்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையில், தலைமைக் கட்டடக் கலைஞர், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்களுக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய சீருந்துகள் மற்றும் ஈப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 7 புதிய சீருந்துகள் மற்றும் 22 புதிய ஈப்புகள் ஆகியவற்றை முதல்வர் பொதுப்பணித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப. பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டாபிக்ஸ்