Tanjore Balasaraswati Memorial: கலைநயத்துடன் ஆடிய காலம்போற்றும் பரதநாட்டிய கலைஞர் பாலசரஸ்வதியின் நினைவு நாள் இன்று
இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூர் பாலசரஸ்வதி நினைவு நாள் (MINT)
தஞ்சை பாலசரஸ்வதி, பாலசரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறார். இவர், இந்திய நடனக் கலைஞர் ஆவார், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல பகுதிகளிலும் நன்கு அறியப்பட்டவர்.
இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவராக திகழ்கிறார்.
பாலசரஸ்வதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். தாயார் ஐயம்மாள் ஒரு சிறந்த பாடகி. தந்தை கோவிந்தராஜுலுவும் ஓர் இசைக் கலைஞர் ஆவார்.