‘சீமான் தான் திமுக கூட்டணிக்கு அனுப்பினார்.. கூட்டணி உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது’ வேல்முருகன் பரபரப்பு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சீமான் தான் திமுக கூட்டணிக்கு அனுப்பினார்.. கூட்டணி உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது’ வேல்முருகன் பரபரப்பு பேட்டி!

‘சீமான் தான் திமுக கூட்டணிக்கு அனுப்பினார்.. கூட்டணி உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது’ வேல்முருகன் பரபரப்பு பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 18, 2024 12:21 PM IST

‘வேறுவழியில்லாமல் திமுக உடன் கூட்டணி உடன்படிக்கை வைத்துக் கொண்டோம். அவ்வளவு தான். தேர்தலுக்கு உடன்படிக்கை வைத்துக் கொண்டோம், தேர்தல் முடிந்துவிட்டது. இன்று சட்டமன்ற உறுப்பினராக அந்த தொகுதி சார்பாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஆனால், 234 தொகுதிகளுக்கான பிரச்னையை நான் பேசலாம்’

‘சீமான் தான் திமுக கூட்டணிக்கு அனுப்பினார்.. கூட்டணி உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது’ வேல்முருகன் பரபரப்பு பேட்டி!
‘சீமான் தான் திமுக கூட்டணிக்கு அனுப்பினார்.. கூட்டணி உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது’ வேல்முருகன் பரபரப்பு பேட்டி!

‘நான் திமுக சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம், ஆனால், நான் ஒரு கட்சியை தனியாக நடத்துகிறேன். இந்த அரசுக்கு நற்பெயர் கொடுப்பதற்காக தான் நான் இவற்றை கூறுகிறேன். குறைகளை அப்படி தான் கலைஞர் எடுத்துக் கொண்டார். நான் பாமக.,யில் இருந்த போது, கட்சி அறிக்கை வரும்போது எல்லாம், ‘தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது’ என்று தானே கலைஞர் சொன்னார். அவரிடம் பெருந்தன்மை இருந்தது.

கூட்டணி வைத்தது ஏன்?

இன்று அமைச்சர்களின் உதவியாளர்களே நமது அழைப்பை ஏற்க மறுக்கின்றனர். தேர்தலை பொருத்தவரை நான் தெளிவாக உள்ளேன். தேர்தல் என்பது, திமுக, அதிமுக உடன் கூட்டணி வைக்க கூடாது என்று தான் 2016ல் தனியாக கட்சி தொடங்கி, போட்டியிட்டேன். நான் போட்டியிடும் போது, எனக்கு 32 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இன்னும் 20 ஆயிரம் வாக்குகள் எனக்கு வேண்டும். அந்த வாக்குகள், அந்த பகுதியில் பாமகவிடம் உள்ளது. அவர்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். அடுத்து இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவிடம் தான் உள்ளது.

சீமான் தான் என்னை அனுப்பி வைத்தார்

அந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக சென்று, மக்கள் பிரச்னையை பேச வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்காக திமுக, அதிமுக உடன் சிறு உடன்பாடு செய்து கொண்டோம். என் உறவினர்கள் எல்லாம், அந்த இரு கட்சிகளுக்குள்ளும் இருக்கிறார்கள். தமிழ் தேசிய தளத்தில் இருந்து, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புளை இணைத்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேண்டாம், நாம் ஒன்றிணைவோம் என்று கடந்த தேர்தலில் முயற்சி எடுத்தேன். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சீமான் என்னுடன் வரவில்லை. அய்யா மணியரசன் தான் அதற்கு சாட்சி. வேண்டுமானால், அவரிடம் கேளுங்கள். உண்மையா இல்லையா என்று நீங்களே கேளுங்கள். இதே சீமான் தான் என்னை அழைத்து கூறினார், ‘தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,ஆக இருந்து பல சாதனை படைத்திருக்கிறீர்கள், நான் சொல்கிறேன், திமுக உடன் கூட்டணி வைத்து ,நீங்கள் சட்டமன்றத்திற்குள் போங்க’ என்று என்னை வாழ்த்தி அனுப்பியது சீமான் தான். நான் என்ன செய்ய முடியும்? 

தேர்தல் உடன்பாடு முடிந்து போனது

நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நேர்மயைான மக்களுக்கான சட்டமன்ற உறுப்பினர். வேறுவழியில்லாமல் திமுக உடன் கூட்டணி உடன்படிக்கை வைத்துக் கொண்டோம். அவ்வளவு தான். தேர்தலுக்கு உடன்படிக்கை வைத்துக் கொண்டோம், தேர்தல் முடிந்துவிட்டது. இன்று சட்டமன்ற உறுப்பினராக அந்த தொகுதி சார்பாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஆனால், 234 தொகுதிகளுக்கான பிரச்னையை நான் பேசலாம். அந்த உரிமையை சட்டமன்ற விதிகள் எனக்கு வழங்கியிருக்கிறது. என் தொகுதிக்குள் தான் நான் பேச வேண்டும், கேள்வி எழுப்ப வேண்டும் என்று பேரவை தலைவர் பேசுகிறார். துணை கேள்வி கேட்டால், ‘கன்னியாகுமரி விவகாரத்துக்கு பண்ருட்டியில் இருந்த எதுக்கு கேள்வி கேட்குறீங்க’ என்று பெல் அடித்து உட்கார வைக்கிறீங்க, இதுவா மாண்பு? இதை முதல்வர் ஒழுங்குபடுத்தனும், சபை முன்னவர் ஒழுங்குபடுத்தனும்,’

என்று அந்த பேட்டியில் டி.வேல்முருகன் பேசியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.