Top 10 News:சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு எதிர்ப்பு முதல்கோவை வந்த முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 தமிழ்நாடு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News:சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு எதிர்ப்பு முதல்கோவை வந்த முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 தமிழ்நாடு!

Top 10 News:சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு எதிர்ப்பு முதல்கோவை வந்த முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 தமிழ்நாடு!

Suguna Devi P HT Tamil
Published Nov 05, 2024 12:10 PM IST

தமிழ்நாட்டில் இன்று (05/11/2024) நண்பகல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை டாப் 10 செய்திகளாக இங்கு காண்போம்.

சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு எதிர்ப்பு முதல் கோவை வந்த முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 தமிழ்நாடு!
சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு எதிர்ப்பு முதல் கோவை வந்த முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 தமிழ்நாடு!

நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் புகார்: பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை சென்ற முதலமைச்சர்: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேள்கொள்ள உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக கோவை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் திறக்க இருக்கிறார். எல்காட் நிறுவனம் சார்பில் 114.16 கோடி ரூபாயில் எட்டு தளங்களுடன் 3.94 ஏக்கரில் தொழில்நுட்பப் பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் தங்க நகை தொழில் அமைப்பை நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். வீட்டுவசதி வாரிய நில எடுப்பில் இருந்து விடுவித்த நிலங்களில் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்குகிறார்.

சென்னை பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு: சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவால் தொடர்ந்து மாணவிகள் மயக்கம் போட்டது சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது இந்த பள்ளியில் மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. 

கமலா ஹாரிஸ் வெற்றி பெற திருவாரூர் கோயிலில் சிறப்பு வழிபாடு: உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான தீருவாரூர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தப்பட்டது. 

முதல்வர் ஸ்டாலினிற்கு 8 ஆவது இடம்: இந்தியா டூடே வெளியிட்ட இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதல்வர் ஸ்டாலினிற்கு 8 ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலும் அடக்கமான மாவீரர் எனவும் பாராட்டு பெற்றுள்ளார். 

ஈரோட்டில் மழைநீரில் மூழ்கிய பாலம்: ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக நம்பியூரில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியுள்ளது. மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

விஜய்- திருமா சந்திப்பு உறுதி: டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பிரமாண்ட விழாவில், அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெற்றுக் கொள்கிறார் என்ற தகவல் உலவிக் கொண்டிருந்தது. தற்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமா இந்த சந்திப்பை உறுதி படுத்தியுள்ளார். 

கழிவு நீர் சுத்தம் செய்ய ரோபோ: சென்னையில் சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்ய ரோபோக்களை பயன்படுத்த இருப்பதாகவும், இது குறித்து ஐஐடியிடம் பேசி வருவதாகவும் அமைச்சர் நேரு தெரிவித்தார். 

 முடிச்சூர் பேருந்து நிலையம்: முடிச்சூர் பேருந்து நிலையம் நவம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.