Pongal Prize 2024: பொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் தேதி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் தேதி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் நாளை ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைப் பெறுவதற்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதியான நாளை முதல் ஜனவரி 9ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
ஒரு வேளை இந்தப் பொங்கல் பரிசினை வரும் ஜனவரி 10ஆம் தேதியில் இருந்து வரும் 13ஆம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி கூட பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பொங்கல் பரிசுத்தொகை தொகுப்பில் ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டுச்சர்க்கரை, 1 முழுக்கரும்பும், வேஷ்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என அழுத்தம் திருத்தமாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்