அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு.. துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு.. துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு.. துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 03:22 PM IST

அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட சிறிது நேரத்தில் திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு.. அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
திடீர் உடல்நலக்குறைவு.. அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்

முன்னதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர்களின் துறைகள் மாற்றம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சட்டத்துறை பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்றும் அமைச்சர் ரகுபதி இனி கனிமவளத்துறையை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த இரு அமைச்சர்கள்

கடந்த வாரம் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சரானார்.