சூடுபிடிக்கும் தவெக மாநாடு முதல் கண்டனம் தெரிவித்த அன்புமணி வரை!தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் இன்று நடந்த நிகழ்வுகளில் முக்கியமான மற்றும் டாப் செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக 56வது பட்டமளிப்பு விழா - ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது இதில் தமிழக ஆளுநர் ஆரன் ரவி மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பித்தார்.
கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக அதோகதி தான்: எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து முடிந்துள்ளது. சேலத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரி தொகுதியாக இந்த எடப்பாடி தொகுதி விளங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றியை அடைவோம் என கூறினார். மேலும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் எனவும் கூறினார். கூட்டணி கட்சிகள் இல்லாவிடில் திமுகவின் வலிமை குறைந்துவிடும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசுகையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்று உள்ளார். அவருடைய வயது தான் எனது அனுபவம் எனக் கூறியுள்ளார். நடிகர் விஜயின் தவெக மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சூடு பிடிக்கத் தொடங்கிய தவெக மாநாடு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே விக்ரவாண்டி சாலையில் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மாநாட்டின் ஏற்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பலரும் மாநாடு நடைபெறும் இடத்தை அடிக்கடி விசிட் அடித்து வருகின்றனர். படுவேகமாக நடந்து வரும் தவெக மாநாட்டில் நடிகர் விஷால் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
400 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த அமைச்சர்: திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது, ரூ.411 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தென் மற்றும் மேற்கு தமிழ் நாட்டுபகுதிகளில் மழை: தமிழ்நாட்டின் தென் மற்றும் கொங்கு மாவட்டங்களை மழை ஒரு காட்டு காட்டப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு தனியார் பேருந்துகள் வாடகை- அன்புமணி, டிடிவி கண்டனம்!
தீபாவளிக்கு தனியார் பேருந்துகள் வாடகைக்கு இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே. இதனை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.
நாமக்கலில் முதலமைச்சர்
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நாமக்கல் சென்றார். நாமக்கலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மக்களை சந்தித்தார். மேலும் மக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
கனவு உலகத்தில் இருக்கும் எடப்பாடி
திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக எதிர் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கூறியிருந்தார். இதுக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கனவு உலகத்தில் இருப்பதாக சாடியுள்ளார்.
விஜய் கட்சியால் சீமான் பயத்தில் உள்ளார்
நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மாநில பொறுப்பாளர்கள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன், புகழேந்தி மாறன், தனசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் சீமானுக்கு தன்னம்பிக்கை கிடையாது. யாருக்கு தன்னை விட கைதட்டல்கள் அதிகமாக வந்தாலும் அவர்களை அடக்கி விடுவார். விஜய் அரசியலுக்கு வருவதை பார்த்து சீமான் பயங்கரமாக பயப்படுகிறார் எனத் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்