Siddha pension Increase: பரம்பரை சித்த மருத்துவ ஓய்வூதியம் உயர்வு!
பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை சித்த மருத்துவர் களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தர வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த கோரிக்கை நிறைவேறி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
பதிவு செய்த ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அது ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
அதன் பின்னர் தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இந்த தொகை போதுமானதாக இல்லை என ஓய்வூதியதாரர்கள் உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக மாற்றி அறிவித்தது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்த 60 வயதிற்கு மேற்பட்ட பரம்பரை மருத்துவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 3000 வழங்கப்படும் என இன்று ஆணை வெளியிட்டுள்ளது.
டாபிக்ஸ்