கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

Karthikeyan S HT Tamil
Mar 24, 2022 12:26 PM IST

சென்னை: கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற உறுதியை தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

<p>தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு</p>
<p>தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு</p>

இதற்கிடையில், கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் சில தனியார் பள்ளிகள் மாணவ, மாணவியர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று உறுதியளிக்கும் வகையில் சான்றளிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றவில்லை; பெற்றோர் குறித்து தரக்குறைவாக பேசுவது போன்ற நிகழ்வுகள் எதுவும் பள்ளியில் நடக்கவில்லை என சான்றளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும், கல்விக்கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகள் மீது புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவல் அதிகம் இருந்த காலங்களில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டியதில் இருந்து கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்த நிலையில், தற்பொழுது பள்ளி கல்வித் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.