தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamilnadu Cm Announced Pongal Gift Money And Check Full Details

Pongal Gift Money: பொங்கல் விழாவுக்கு ரொக்க பணம் பரிசு! யாருக்கெல்லாம் கிடைக்கும் - முழு விவரம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2024 01:47 PM IST

பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், பணமும் ரொக்கமாக வழங்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த முழு விவரம் இதோ
பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த முழு விவரம் இதோ

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி சார்பில் வலியுறுத்தபபட்டன. இதற்கிடையே பொங்கல் பரிசாக பணமும் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தமிழ்நாடு மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசாக ரூ. 1000 பணமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் திருநாளை சிறப்பாக பொதுமக்கள் கொண்டாடிடவும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுதுறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து இதர அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசாக நியாயவிலை கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பொங்கலை முன்னிட்டு முன்னரே கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெற்று வரும் 1 கோடியே 15 லட்சம் பேரில் கணக்கில் வரும் 10ஆம் தேதியே அதற்கான தொகை அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்