TVK: குழந்தைகள் அணி முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி வரை! தவெகவில் இத்தனை அணிகளா? வெளியான பரபரப்பு தகவல்!
குழந்தைகள் அணி, உண்மை சரிபார்ப்பு அணி, இளம்பெண்கள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி, தொழில் முனைவோர் அணி, காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுசூழல் அணி உள்ளிட்டவை கவனம் பெறக்கூடிய அணிகளாக உள்ளது.

சிறார் உட்பட தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு தயார் ஆகும் தவெக
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தமிழக வெற்றி கழகத்தில் தீவிரம் அடைந்து உள்ளது. கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அணிகளை அமைக்கும் பணிகள் அக்கட்சியில் தீவிரம் பெற்று வருகின்றன. ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தில் 19 அணிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் கூடுதலாக 9 அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் அணி, உண்மை சரிபார்ப்பு அணி, இளம்பெண்கள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி, தொழில் முனைவோர் அணி, காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுசூழல் அணி உள்ளிட்டவை கவனம் பெறக்கூடிய அணிகளாக உள்ளது.
மேலும் படிக்க: 'டாக்டர் எங்கே? உடனே வரனும்!’ அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!
தமிழக வெற்றிக்கழக அணிகள் பட்டியல்
- தகவல் தொழில் நுட்ப அணி
- வழக்கறிஞர் அணி
- ஊடக அணி
- பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் அணி
- பயிற்சி மற்றும் தொண்டர்கள் மேம்பாட்டு அணி
- உறுப்பினர் சேர்க்கை அணி
- காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுசூழல் அணி
- வரலாற்று தரவுகள் ஆராய்ச்சி மற்றும் உண்மை சரிபார்ப்பு அணி
- திருநங்கைகள் அணி
- மாற்றுத்திறனாளிகள் அணி
- இளைஞர் அணி
- மாணவர் அணி
- மகளிர் அணி
- இளம்பெண்கள் அணி
- சிறார் அணி
- தொண்டர் அணி
- வர்த்தகர் அணி
- மீனவர் அணி
- நெசவாளர் அணி
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி
- தொழிலாளர் அணி
- தொழில் முனைவோர் அணி
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணி
- மருத்துவர் அணி
- விவசாயிகள் அணி
- கலை மற்றும் பண்பாட்டு பிரிவு
- தன்னார்வளர்கள் பிரிவு
- அனைத்திந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
மேலும் படிக்க: ’2026 தேர்தல் தவெக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்!’ புஸ்ஸி ஆனந்திடம் PK தந்த ரிப்போர்ட்!
