HBD Venkatachalam Pillai: தனித்தமிழ் அன்பர்களை உருவாக்கிய தமிழறிஞர் வேங்கடாசலம் பிள்ளை பிறந்த நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Venkatachalam Pillai: தனித்தமிழ் அன்பர்களை உருவாக்கிய தமிழறிஞர் வேங்கடாசலம் பிள்ளை பிறந்த நாள் இன்று

HBD Venkatachalam Pillai: தனித்தமிழ் அன்பர்களை உருவாக்கிய தமிழறிஞர் வேங்கடாசலம் பிள்ளை பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil
Dec 20, 2023 04:45 AM IST

தமிழ் இலக்கியத்தைக் கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல் ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார்.

தமிழறிஞர் அ. வேங்கடாசலம் பிள்ளை
தமிழறிஞர் அ. வேங்கடாசலம் பிள்ளை (tamil.wiki)

"கரந்தைக் கவியரசு” என அழைக்கப்பட்டார். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தவர்.

பிறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், அரங்கசாமிப் பிள்ளை - தருமாம்பாள் தம்பதிக்கு மகனாக 1886ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்தார்.

தஞ்சையில் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தனிக்கல்வியாக தமிழ் இலக்கியத்தைக் கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல் ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்த வேங்கடாசலம் பிள்ளை, திருவையாறு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.

"உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்” என்று "தமிழ்ப் பொழில்" இதழில் அ. வேங்கடாசலம் பிள்ளை எழுதினார்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கியவர்.

மொழி அரசி, மணிமேகலை நாடகம், செந்தமிழ்க் கட்டுரைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அகநானூறுக்கு உரை எழுதியிருக்கிறார்.

ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து ”தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை” என்ற நூலை இவர் பதிப்பித்தார்.

தமிழ் மொழிக்கு முக்கியப் பங்காற்றிய தமிழறிஞர் அ. வேங்கடாசலம் பிள்ளையை அவரது பிறந்த நாளில் நினைவு கூருவோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.