Tamilnadu Weather Update: ‘வர்தா முதல் ஃபெஞ்சல் வரை!’ கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை சூறையாடிய டாப் 8 புயல்கள்!
கடலோர மாநிலமான தமிழ்நாட்டிற்கு புயல்கள் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் பல புயல்க கடும் பாதிப்பை ஏற்படுத்தி சென்று உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை பாதித்த முக்கிய புயல்கள் பற்றிய ஒரு பார்வை இங்கே:-

1. வர்தா புயல் (டிசம்பர் 12, 2016)
தமிழ்நாட்டைத் தாக்கிய மிக அழிவுகரமான புயல்களில் ஒன்று வர்தா புயல். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காற்றுடன் சென்னைக்கு அருகே பழவேற்காடு கரையைக் கடந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை சீர்குலைத்தது. 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2. ஓகி புயல் (2017)
ஓகி புயல் முதன்மையாக கேரளா மற்றும் லட்சத்தீவுகளை பாதித்தாலும், அது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. கனமழை, வெள்ளம் மற்றும் உயிர் சேதத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் கடலில் காணாமல் போகினர்.
3. கஜா புயல் (நவம்பர் 15, 2018)
கஜா புயல் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது, மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் விவசாயம், குறிப்பாக தென்னந்தோப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது.
