’மீண்டும்! மீண்டுமா?’ தமிழ்நாட்டை ரூட் எடுக்கும் மழை மேகங்கள்! 37 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
37 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இந்த நிலையில் பிற்பகல் 1 மணி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
லேசான முதல் மிதமான மழை எச்சரிக்கை
மேலும் கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆலந்தூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாபிக்ஸ்