தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu Transport Workers Unions Go Strike On January 09

Bus Strike: பொங்கலுக்கு ஊருக்கு செல்ல முடியுமா..? திட்டமிட்டப்படி நாளை முதல் பஸ் ஸ்டிரைக்!

Karthikeyan S HT Tamil
Jan 08, 2024 03:10 PM IST

அமைச்சா் சிவசங்கரனுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததையடுத்து திட்டமிட்டபடி நாளை (டிச.09) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் (கோப்புபடம்)
தமிழ்நாடு அரசு பேருந்துகள் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் அமைச்சா் சிவசங்கா் தலைமையில் இன்று (டிச.08) மீண்டும் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை (டிச.09) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும்; வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெற முடியாது என அண்ணா தொழிற்சங்கத்தை சோ்ந்த கமலக்கண்ணன் தொிவித்துள்ளாா். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியுமா..? என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, அமைச்சா் சிவசங்கா் கூறுகையில், "தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தரப்படும். தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள் ஏற்பு. மேலும் 4 கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம்" என்று தொிவித்துள்ளாா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்