சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்

சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்

Kathiravan V HT Tamil
Published Mar 19, 2025 11:52 AM IST

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கொடுங்கையூர், கோவை, மதுரையில் தொடங்க உள்ளோம். அந்த ஊர் குப்பை மட்டுமின்றி அருகில் உள்ள குப்பைகளையும் இணைத்து மின்சாரத்தை தயாரிப்போம். இத்திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து உள்ளார்.

சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்
சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கிய 2025 - 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் விவாதம் தொடர்கிறது. நாளைய தினம் வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும், நாளை மறுநாள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையும் நடைபெறுகிறது. வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை துறைரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க:- நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ’15 நாட்களுக்குள் திமுக கொடி கம்பங்களை அகற்றுங்கள்!’ பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் கேள்வி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் தினமும் 20 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் சுடுகாடு மற்றும் சாலைகளின் ஓரங்களிலும் கொட்டும் நிலை உள்ளது. ஆரணி நகராட்சிக்கு குப்பை கிடங்கு அமைக்கப்படுமா?

மேலும் படிக்க:- தங்கம் விலை நிலவரம்: ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

அமைச்சர் கே.என்.நேரு பதில் 

அவர் ஏற்கெனவே அமைச்சராக இருந்தவர். அவர்தான் அரசுக்கு உதவ வேண்டும். ஏதாவது இடம் காண்பித்து கொடுத்தால் அதை வாங்கி கொடுப்போம். எல்லா இடங்களிலும் இந்த பிரச்னை உள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கொடுங்கையூர், கோவை, மதுரையில் தொடங்க உள்ளோம். அந்த ஊர் குப்பை மட்டுமின்றி அருகில் உள்ள குப்பைகளையும் இணைத்து மின்சாரத்தை தயாரிப்போம். இத்திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும். ஒவ்வொரு நகராட்சியிலும் குப்பை கொட்ட சிரமமாக உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் குப்பை கொட்ட கூட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குறைந்த விலையை இடத்தை உறுப்பினர் காண்பித்தால் உரிய நிதியை கொடுத்து நிலம் தர தயாராக உள்ளோம் என கூறினார்.