10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் வருகை புரியாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத் தேர்வுகள் 04.07.2025 முதல் நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணை 16.05.2025 அன்று வெளியிடப்படும்.

10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!
பள்ளிக்கல்வித் துறையானது 2025 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத் தேர்வு முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், விடைத்தாள் நகல் கோருதல் மற்றும் துணைத் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக சான்றிதழ்
10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிழ் பெறுவதற்கும், மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை பெறுவதற்கும், அனைத்து பள்ளிகளும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 19.05.2025 முதல் பதிவிறக்கம் செய்யலாம். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை காலை 10 மணி முதல் பார்க்கலாம், பிளஸ் 1 மாணவர்கள் மதியம் 2 மணி முதல் மதிப்பெண் விவரங்களை அறியலாம்.