தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu On High Alert As Cyclone 118 Trains Cancelled

Cyclone : புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை .. 118 ரயில்கள் ரத்து..தென்னக ரயில்வே அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
Dec 03, 2023 06:35 AM IST

புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை
புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் காரணமாக, டிசம்பர் 4ஆம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 118 ரயில்களை ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 3 முதல் 7ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்தாகும் டெல்லி ரயில்கள் பட்டியலில் சென்னை சென்ட்ரலில் இருந்து டில்லி செல்லும் 'கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில் டிச.5, 6, 7 ஆகிய தேதிகளிலும், சென்னை -டெல்லி தமிழ்நாடு விரைவு மற்றும் திருவனந்தபுரம் - டெல்லி  கேரளா விரைவு ரயில் டிச.3, 4 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக டிச.5, 6 ஆகிய தேதிகளிலும், மதுரை - டெல்லி 'சம்பர்க் கிராந்தி விரைவு ரயில்' டிச.5-ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.7-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல ரத்தாகும் வடமாநில ரயில்கள் பட்டியலில் சென்னை சென்ட்ரல் அகமதாபாத் நவ்ஜீவன் அதிவிரைவு ரயில் டிச.3, 4, 5 தேதிகளிலும் மறுமார்க்கமாக டிச.4, 5, 6 தேதிகளிலும், சென்னை - பீகார் கங்கா காவேரி விரைவு ரயில் டிச.4ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.6ஆம் தேதியும், மதுரை சண்டீகர் அதிவிரைவு ரயில் டிச.3-ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.4-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

தொடர்ந்து, சென்னை - விஜயவாடா 'பினாகினி அதிவிரைவு ரயில்' இருமார்க்கமாக டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும், ஷாலிமர் - சென்னை 'கோரமண்டல் விரைவு ரயில்' டிச.3. 4, 5 தேதிகளிலும், மறுமார்க்கமாக டிச.4, 5, 6 தேதிகளிலும், திருநெல்வேலி ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கேந்ரா விரைவு ரயில் டிச.4ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.7ஆம் தேதியும், சென்னை சென்ட்ரல் விஜயவாடா 'வந்தே பாரத் ரயில்' இருமார்க்கமாகவும் டிச.4,5 ஆகிய தேதிகளிலும், டெல்லி - புதுச்சேரி விரைவு ரயில், நாகர்கோவில் - ஷாலிமர் 'குருதேவ் அதிவிரைவு ரயில்', பனாரஸ்- ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில், ஹவுரா- புதுச்சேரி அதிவிரைவு ரயில் டிச.3- ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.6-ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

இது மட்டுமின்றி கேரளத்தின் கொச்சுவேலி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கர்நாடகத்தின் பெங்களூர் என தெற்கு ரயில்வே உட்பட்ட பகுதியில் இருந்து செல்லும் 118 ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்