தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் வரை!

தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 23, 2025 08:00 AM IST

தமிழ்நாட்டில் கனமழை, மதுரையில் முருகன் மாநாடு, முருகன் மாநாடு மீது சேகர்பாபு விமர்சனம், அந்நிய முதலீடுகள் ஆமை வேகத்தில் உள்ளதாக ஈபிஎஸ் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் வரை!
தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் வரை!

1. தமிழ்நாட்டில் கனமழை

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கனமழை பெய்தது. வேப்பூர், திருவண்ணாமலை: கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து சேதம். மேட்டூரில் ஒரு உணவகத்தின் மேற்கூரை சரிந்து விபத்து.

2. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு 

"ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம்.. இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம்.. இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்குப் பிரச்சனை"… சீண்டிப் பார்க்காதீர்கள்; சாது மிரண்டால் காடு கொள்ளாது” என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு.

3.அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.

கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம். வரும் தேர்தலில் இந்து வாக்குவங்கியை நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம்.

4.ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி

முருக பக்தர்கள் மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி என்று அண்ணாமலை கருத்து. இந்துக்கள் வாழ்வியல் முறையில் தலையிட வேண்டாம் என அண்ணாமலை பேச்சு. 

5.எந்த திருப்பத்தையும் ஏற்படுத்தாது - சேகர்பாபு 

முருக பக்தர்கள் மாநாடு எந்த திருப்பத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கருத்து, கடவுளின் பெயரால் ஒரு கட்சி மாநாடு நடத்துவதே தவறு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம். மக்களின் நம்பிக்கையை அற்ப அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கருத்து. 

6.ஆமை வேகத்தில் அந்நிய முதலீடுகள் 

தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் அந்நிய முதலீடுகள் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் சாடல். 

7. சென்னையில் வெள்ளத் தடுப்பு முயற்சிகள்

சென்னை மாநகராட்சி, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிண்டி பகுதியைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் தேக்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

8.ஆனி திருமஞ்சனம் - சிதம்பரத்தில் கொடியேற்றம்

ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம். நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உத்சவ ஆச்சாரியார் சிவகைலாஸ் தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க மேள, தாளங்களுடன் கொடியேற்றப்பட்டது. வருகிற ஜூலை 1ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

9.தெருநாய் கடித்து சிறுவன் காயம் 

சென்னை ராமாபுரம் திருவள்ளூர் சாலையில், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் ரித்விக்கை கடித்த தெரு நாய். சிறுவன் மருத்துவமனையில் அனுமதி. ராமாபுரம் போலீசார் விசாரணை.

10.நெல்லை - காவலருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், குடும்பத்துடன் பொழுதுபோக்க வந்த காவலருக்கு அரிவாள் வெட்டு. அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.