நதிநீர் பிரச்னை: ’அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்!’ ஈபிஎஸ்க்கு துரைமுருகன் இடையே காரசார விவாதம்!
“அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நீங்கள் தொடங்கினீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதை கிடப்பில் போட எங்கள் தலைவர் விரும்பவில்லை. நிதி ஒதுக்கி அதை முடித்தோம். ஆனால், தாமிரபரணி-கருமேனி ஆற்றுத் திட்டத்தை நீங்கள் 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டீர்கள். நாங்கள் வந்து அதை முடித்தோம்”

நதிநீர் பிரச்னை: ’அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்!’ ஈபிஎஸ்க்கு துரைமுருகன் இடையே காரசார விவாதம்!
நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசியவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார்.
மேலும் படிக்க:- Savukku Shankar: ’என் வீட்டில் புகுந்து மலத்தை கொட்டிய கும்பல்! வீடியோகாலில் மிரட்டல்' சவுக்கு சங்கர் அதிர்ச்சி ட்வீட்!
எடப்பாடி பழனிசாமி - துரைமுருகன் இடையே காரசார விவாதம்
அண்டை மாநில முதலமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் நெருக்கமாக இருக்கும்போது, தண்ணீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாமே என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதற்கு, "பேச்சுவார்த்தைகளால் பயனில்லை என்பதால்தான் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.