‘யார் அந்த சார்? VS இவன்தான் அந்த சார்?’ அதிமுகவுக்கு போட்டியாக திமுகவினர் காட்டிய பதாகை!
’யார் அந்த சார்?’ என்ற பதாகையுடன் சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் வந்த நிலையில், ‘இவன் தான் அந்த சார்’ என்ற பதாகைகள் உடன் திமுகவினரும் சட்டப்பேரவைக்குள் வந்து உள்ளனர்.
’யார் அந்த சார்?’ என்ற பதாகையுடன் சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் வந்த நிலையில், ‘இவன் தான் அந்த சார்’ என்ற பதாகைகள் உடன் திமுகவினரும் சட்டப்பேரவைக்குள் வந்து உள்ளனர்.
அண்ணா நகரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவை சேர்ந்த சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சுதாகரின் புகைப்படத்தை காட்டி, ’இவன் தான் அந்த சார்’ என்ற வாசகத்துடன் துண்டு சீட்டு கொடுத்து திமுகவினர் மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுதாகர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்று உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ பரந்தாமன், அரசியல் எதிர்க்கட்சிகள் புலன்விசாரணையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை கொண்டு அரசின் மீதும், ஆட்சியாளர்கள் மீது பொதுவெளியில் பேசுவது சட்டத்திற்கு புறம்பானது. விசாரணையில்தான் யார் என்பதை சொல்ல முடியும். நீதிமன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த முடியும். இதை புரிந்து கொள்ளாத அதிமுக எம்.எல்.ஏக்கள், இதற்கு விடை தெரியாதது போல் தினமும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு சட்டமன்ற நடவடிக்கைகளில் ஈடுட்டு வருகிறார்கள். அரசின் பொறுப்பு விடை கொடுப்பது என்பதால், ‘யார் அந்த சார்?’ என்று கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு, ‘இவன்தான் அந்த சார்’ என்பதை ஊடகங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
யார் அந்த சார்?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது காதலருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த அடையாளம் தெரியாத நபர், இருவரையும் வீடியோ எடுத்ததுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பியோடி முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் மாணவியிடம் அத்துமீறும் முன்னர் ’சார்’ பெயரில் ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் பேசியதாக தெரிகிறது.
இவன்தான் அந்த சார்?