Madras High Court: ’உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்!’ சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madras High Court: ’உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்!’ சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court: ’உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்!’ சென்னை உயர்நீதிமன்றம்

Kathiravan V HT Tamil
Jan 31, 2025 01:44 PM IST

அப்போது பேசிய நீதிபதி வேல்முருகன், தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். இன்று மாலை 4:30 மணிக்குள் அவர் ஆஜராக வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். இல்லையெனில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

Madras High Court: ’உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்!’ சென்னை உயர்நீதிமன்றம்
Madras High Court: ’உள்துறை செயலாளர் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்!’ சென்னை உயர்நீதிமன்றம்

2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி பி.சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் விளக்கம் தரப்பட்டது.  இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

இதுபோன்ற சம்பவம் இது முதல் முறையல்ல, பல வழக்குகளில் விசாரணை முடிந்த பிறகும், போலீசார் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்வதில்லை. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தவுடன், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது சட்டம். காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட, மீட்கப்பட்ட, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலங்கள் எந்தவிதமான தாமதமும் இன்றி உடனடியாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு சென்றடைய வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.  

விசாரணை முடிந்த பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பல வழக்குகளில், வரம்புக்குட்பட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதி கூறினார். 

காவல் துறையில் நிலவும் சட்ட விரோதமான நடைமுறை, ஏழை வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு விளைவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலாளருக்குத் தெரியுமா என்றும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு தரக் கோரி மனுத்தாக்கல் செய்து இருப்பதாகவும், மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் கூறினார். 

அப்போது பேசிய நீதிபதி வேல்முருகன், தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். இன்று மாலை 4:30 மணிக்குள் அவர் ஆஜராக வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். இல்லையெனில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்து உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.