தமிழ்நாடு பட்ஜெட் 2025: இந்திய ரூபாய் குறியீடு ₹ பதில் ’ரூ’ மாற்றம்! கோதாவில் குத்தித்த ஸ்டாலின் அரசு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாடு பட்ஜெட் 2025: இந்திய ரூபாய் குறியீடு <Span Class='webrupee'>₹</span> பதில் ’ரூ’ மாற்றம்! கோதாவில் குத்தித்த ஸ்டாலின் அரசு!

தமிழ்நாடு பட்ஜெட் 2025: இந்திய ரூபாய் குறியீடு <span class='webrupee'>₹</span> பதில் ’ரூ’ மாற்றம்! கோதாவில் குத்தித்த ஸ்டாலின் அரசு!

Kathiravan V HT Tamil
Published Mar 13, 2025 02:40 PM IST

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் (Logo) ரூபாய் சின்னத்தை குறிக்கும் தேவநாகிரி மற்றும் ரோமானிய எழுத்துக்களை சேர்த்து உருவாக்கப்பட்ட ₹ என்ற இலச்சினைக்கு பதிலாக தமிழில் ரூபாயை குறிக்க பயன்படுத்தும் ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது

தமிழ்நாடு பட்ஜெட் 2025: இந்திய ரூபாய் குறியீடு ’ <span class='webrupee'>₹</span>’ பதில் ’ரூ’ மாற்றம்! கோதாவில் குத்தித்த ஸ்டாலின் அரசு!
தமிழ்நாடு பட்ஜெட் 2025: இந்திய ரூபாய் குறியீடு ’ <span class='webrupee'>₹</span>’ பதில் ’ரூ’ மாற்றம்! கோதாவில் குத்தித்த ஸ்டாலின் அரசு!

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த ஓராண்டுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் விதமாக மாநில திட்டக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் (Logo) ரூபாய் சின்னத்தை குறிக்கும் தேவநாகிரி மற்றும் ரோமானிய எழுத்துக்களை சேர்த்து உருவாக்கப்பட்ட என்ற இலச்சினைக்கு பதிலாக தமிழில் ரூபாயை குறிக்க பயன்படுத்தும் ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது.

அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு அரசு பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள இலச்சினையில் இந்திய ரூபாயை குறிக்கும் குறியீட்டுக்கு பதில் தமிழில் ’ரூ’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுகிறது, இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த சின்னத்தை வடிவமைத்த திரு. உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன். திரு.மு.க.ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு முட்டாள் ஆக முடியும்? என விமர்சனம் செய்து உள்ளார்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.