TN Assembly: உரையை வாசிக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார் ஆளுநர்! சட்டப்பேரவையில் நடந்தது என்ன? இதோ முழு விவரம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![TN Assembly: உரையை வாசிக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார் ஆளுநர்! சட்டப்பேரவையில் நடந்தது என்ன? இதோ முழு விவரம்! TN Assembly: உரையை வாசிக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார் ஆளுநர்! சட்டப்பேரவையில் நடந்தது என்ன? இதோ முழு விவரம்!](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/06/550x309/Ravi_Issue_1736142855728_1736142871568.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் உரையை வாசிப்பதற்காக ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோஷம் எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் ’யார் அந்த சார்?’ என்ற கோஷத்துடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் பதாகைகளை காட்டி கோஷம் எழுப்பினர். அதே வேளையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், வேல்முருகனும் கவர்னருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆளுநர் தேசிய கீதத்தை இசைக்க கோரிய நிலையில், அதனை இசைக்காததால் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டார். பதாகைகளை காட்டி முழக்கம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றவும் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் முன் அனுமதி பெறாமல் எந்த செய்தியைவும் வெளியிடக்கூடாது என சபாநாயகர் கூறி உள்ளார்.
ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரை வாசிக்கப்படாத நிலையில், தமிழில் தயாரிக்கப்பட்ட உரையை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்து வருகிறார்.
ஆளுநர் வெளியேறியது ஏன்?
தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசமைப்பில் கூறியுள்ள முதல் கடமை; தேசிய கீதத்தை பாடுவதற்கு முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு ஆளுநர் வலியுறுத்தினார். தேசிய கீதம் பாட மறுக்கப்பட்டது கவலைக்குரிய விஷயமாகவும் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)