IAS Transfer: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

IAS Transfer: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
தமிழ்நாட்டில் 31 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்:-
- ஈரோடு கூடுதல் ஆட்சியர் ஆர்.சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் செயல் இயக்குநர் எஸ்.சரவணன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- மதுரை மாநகராட்சி ஆணையர் சி.தினேஷ் குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையர் எஸ்.சேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.தர்பகராஜ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- பேரிடர் மேலாண்மை துறைஒ இயக்குநர் வி.மோகன சந்திரன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் ஆர்.சுகுமார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் இயக்குநர் கே.சிவசௌந்தரவல்லி திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி தோட்டக்க்கலைத்துறை இயக்குநராக நியமனம்.
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என்.பூங்கோதை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.
- தமிழ்நாடு பட்டு வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜே.இன்னசண்ட் திவ்யா, தொழிற்கல்வித்துறையின் ஆணையராக நியமனம்.
- எல்கார்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.கண்ணன், கால்நடை துறையின் இயக்குநராக நியமனம்.
- சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஆட்சியர் லலிதாத்தியா நீலம், நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையராக நியமனம்.
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்.
- தமிழ்நாடு சாலைத் திட்டம் - 2 இன் திட்ட இயக்குநர் எஸ்.ஏ.ராமன், தொழிலாளர் நலத்துறை ஆணையராக நியமனம்.
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயூ, அரசுப் பொது துறையின் இணை செயலாளராக நியமனம்.
- விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞெய் நாராயணன் மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலராக நியமனம்.
- செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் ஆர்.அனமிகா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம்.
- திருவாரூர் ஆட்சியர் டி.சாருஸ்ரீ கருவூலங்கள் மற்றும் கணக்குப்பதிவியல் துறையின் இயக்குநராக நியமனம்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் சிகி தாமஸ் வைத்தியன், பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையராக நியமனம்.
- பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையின் ஆணையராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ் நியமனம்.
- உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் இணை செயலாளர் எஸ்.பி.அம்ரித், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளராக நியமனம்.
- பழனி துணை ஆட்சியர் எஸ்.கிருஷ்ணன் சிதம்பரம் துணை ஆட்சியராக நியமனம்.
- தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறையின் மேலாண் இயக்குநர் வி.தக்ஷிணாமூர்த்தி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் தயாரிப்பு ஆணையராக நியமனம்.
- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் எஸ்.கணேஷ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சிறப்பு செயலாளராக நியமனம்.
- கூடுதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஷங்கர் லால் குமாவத், உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் கூடுதல் செயலாளராக நியமனம்.
- வணிகவரித்துறையின் இணை ஆணையர் துர்கா மூர்த்தி ஐஏஎஸ், TANMAG அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமனம்.
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பெருநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலான் இயக்குநராக நியமனம்.
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கே.பி.கார்த்திகேயன் எல்காட் மேலாண்மை இயக்குநராக நியமனம்.
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை திட்ட பணிகள் - 2 -இன் திட்ட இயக்குநராக நியமனம்.
- அரசு பொதுத்துறையின் துணை செயலாளர் ஜெ.இ.பத்மஜா, விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்.
- மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
- தருமபுரி கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் துறையின் செயல் அலுவலகராக நியமனம்.
- கைத்தறி துறை இயக்குநர் ஏ.சண்முக சுந்தரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக நியமனம்.

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.