தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bachelor Of Visual Arts: ’சினிமாவில் சாதிக்க ரெடியா!’ எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அறிய வாய்ப்பு!

Bachelor of Visual Arts: ’சினிமாவில் சாதிக்க ரெடியா!’ எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அறிய வாய்ப்பு!

Kathiravan V HT Tamil
Apr 30, 2024 07:23 PM IST

”இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சார்பில் காட்சிக்கலை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சார்பில் காட்சிக்கலை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையானது தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தை கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 

இந்த நிறுவனம் ஆனது சினிமா திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி உள்ளது. 

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்காக கடந்த 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. 

2024-2025ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகள்கில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. 

இளங்கலை காட்சிக்கலை பிரிவில் ஒளிப்பதிவு (Cinematography), எண்மிய இடைநிலை (Digital Intermediate), ஒலிப்பதிவு (Audiography), இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல் (Direction and Screenplay writing), படத்தொகுப்பு (Film Editing), உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (Animation and Visual Effects) ஆகிய பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கான விண்ணப்பங்களை வரும் 02.05.2024 முதல் 20.05.2025 வரை www.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் மட்டுமே 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்